சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய 7 காரணங்கள் இதோ..!

First Published Nov 2, 2021, 1:24 PM IST

நீதிக்காக போராடும்,  சூர்யாவின் (Suriya)  'ஜெய்பீம்' (Jai bhim) திரைப்படத்தை நீங்கள் ஏன் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள் இங்கே...

இந்த தீபாவளி பண்டிகையை, மேலும் சிறப்பாக்கும் விதமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நடிகர்  சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள 'ஜெய்பீம்' படம் வெளியாகியுள்ளது. இதுவரை நடித்திராத வேடத்தை தேர்வு செய்து நம்பிக்கை மற்றும் உண்மையின் வெற்றியை அழகாக இயக்கி காட்டியுள்ளார் இயக்குனர். படத்தில் சூர்யா பிரபல வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கிறார். பழங்குடியின இருளர் சமூதாய பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய  நீதியை நிலைநாட்டுவதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நாம் தவறவிடாமல் பார்க்க வேண்டியதற்கு  7 காரணங்கள் உள்ளன. 'ஜெய்பீம்' திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி  தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 240 நாடுகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா:

இதுவரை அதிரடி போலீஸ்காரர், தொழிலதிபர், கிராமத்து இளைஞர் என பல அவதாரங்களில் சூர்யாவை பார்த்திருக்கிறோம். ஆனால் 'ஜெய்பீம்' படத்தில், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் வக்கீலாக சூர்யா நடித்திருக்கிறார். அவரது வெளிப்பாடுகள் மற்றும் வலுவான உரையாடல்களுக்காகவே சூர்யாவின் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை வேண்டும். இவரது இந்த புதிய கதாபாத்திரம், ரசிகர்கள் மனதை வென்றுள்ளது என கூறினால் அது மிகையல்ல.

நடிகர் & நடிகைகள்:

வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ் மற்றும் ராவ் ரமேஷ் போன்ற அனைவருமே தங்களுடைய கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு:

படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி வரை மிக சிறப்பான ஒளிப்பதிவால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார் எஸ்.ஆர். கதிர். காடு... மலை முதல் கோர்ட் சீன், போராட்ட களம் என அனைத்து காட்சிகளும் மனதில் நிலைத்து நிற்கிறது.

இயக்குனர்:

'ஜெய்பீம்' படத்தை தா சே ஞானவேல் எழுதி இயக்கி உள்ளார். இந்த உத்வேகமான கதையை எந்த இடத்திலும் பிசுறு தட்ட விடாமல் திரையில் கொண்டுவர அவர் கட்ட கஷ்டங்கள் நன்றாகவே தெரிகிறது.

ஜெய் பீம் படத்தின் கலை பணிகள் அற்புதம். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர் படத்தை மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளராக ஷான் ரொனால்ட் மற்றும் எடிட்டராக பிலோமின்ராஜ் அனைவரும் இணைந்து இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். குறிப்பாக அறிவு எழுதி பாடியது மற்றும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள 'பவர்' பாடல் மரியாதை மற்றும் நீதியை அடைவதற்கான போராட்டம் ஆகியவற்றை கண் முன் நிறுத்தியுள்ளது. இரண்டாவது பாடல், 'தல கோதும் ' மெல்லிசை மற்றும் கடினமான நீதி பயணத்தை உள்ளடக்கியது. இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார், ராஜுமுருகன் எழுதி, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நீதி கதைகளை மையப்படுத்தி பல கதைகள் வந்திருந்தாலும், இதுவரை திரையில் சொல்லப்படாத உண்மையான ஹீரோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சந்துருவின் போராட்டங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காவது அனைவரும் கட்டாயம் எனவே மேலே கூறப்பட்டுள்ள 7 காரணங்களுக்காக நீங்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

click me!