Biggboss Tamil 5: இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று குட்-பை சொன்னது யார் தெரியுமா? வெளியான தகவல்..!

First Published | Oct 31, 2021, 7:26 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5)  4 ஆவது வாரத்தை எட்ட உள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று ரசிகர்கள் கணித்த அந்த பிரபலம் தான் வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் தங்களை ரொம்ப நல்லவர்கள் என்று வெளிகாட்டிக்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல இவர்களுடைய சாயம் வெளுத்து தற்போது வெள்ளையாகி விட்டது என்று தான்கூறவேண்டும்.

இவர்களின் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப ஓவராக பேசி அபிஷேக் பிக்பாஸ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து கடந்த வாரம் வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியேறிய பிரபலம் யார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

Tap to resize

இவரை தொடர்ந்து முதல் வாரத்தில் பாவமான போட்டியாளராக பார்க்கப்பட்ட பவானி, இந்த வாரம் படு பயங்கரமான விஷயங்களை எல்லாம் செய்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.

bb

அதே போல் தாமரையின் அப்பாவி முகமும்... வெளிறியது. எனினும் இந்த வாரம் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் விளையாடி வரும், சின்ன பொண்ணு மற்றும் அபிநய் ஆகிய இருவர் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும். இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.

பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு துளியும் பிசிராமல் இந்த வாரம் வெளியேறி இருப்பது சின்ன பொண்ணு தான். கடைசி நபராக அபிநய் காப்பாற்றப்பட்டார் என கூறப்படுகிறது.

மேலும் அபிநய் தொடர்ந்து சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடி வந்தால், அடுத்த வாரம் வெளியேற போவது அவர் தான் என்பதையும் இப்போதே தங்களுடைய கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். அடுத்த வாரம் என்ன நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!