'தளபதி 66' இப்படி பட்ட படமா? ஹீரோயின் முடிவு செய்யப்பட்டு விட்டாரா... சுட சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

First Published Nov 2, 2021, 11:36 AM IST

தளபதி விஜய் (Vijay) தற்போது 'பீஸ்ட்' (Beast movie) படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படம் குறித்து, அப்பபோது பல தகவல்கள் உலா வரும் நிலையில் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வம்சி சில அப்டேட் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்'  படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர்.

நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கடந்த மாதம் வெளியிட்டனர்.

விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

எனினும் அவ்வப்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது வழக்கமாகி உள்ளது.

இப்படி எந்த வித அதிகார பூர்வ தகவலும் இல்லாமல் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது இயக்குனர் வம்சி தரப்பில் இருந்து ஒரு சில தகவல்கள் வெளியிடப்பட்டு, அது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயின் 66 ஆவது படம் முழுக்க முழுக்க அரசியல் கண்ணோட்டம் கொண்டு எடுக்கப்பட உள்ள திரைப்படம் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மறுத்துள்ள அவர் இது எமோஷனல் திரைப்படம் என கூறியுள்ளார்.

அதே போல் எந்த ஒரு தெலுங்கு சாயலும் இல்லாத, ஒரு தமிழ் படமாகவே உருவாக உள்ளதாகவும். தற்போது வரி இந்த படத்தின் நாயகி யார் என்பது முடிவு செய்யப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து விட்டு, 66 ஆவது படத்தில் இணையும் போது இந்த படத்தின் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!