நடிகை அனிக்காவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர்.. வீங்கிய முகத்துடன் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்!

Published : Mar 06, 2023, 05:59 PM IST

மலையாள நடிகையான அனிக்கா விக்ரமன் தன்னுடைய காதலரால், பலமாக தாக்கப்பட்டு முகம் முழுவதும் வீங்கி, காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

PREV
15
நடிகை அனிக்காவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர்.. வீங்கிய முகத்துடன் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்!

தென்னிந்திய நடிகை அனிக்கா விக்ரமன் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் சமூக ஊடகங்களில், காதலர் பலமாக தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடன், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

25

அனிக்கா விக்ரமன், தன்னுடைய முன்னாள் காதலர் அனூப் பிள்ளை தன்னைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பின்னர், இவரின் முன்னாள் காதலர்மீது  காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில்,  தங்கள் உறவு மற்றும் தன்னை அவர் துஷ்பிரோயோகம் செய்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அனிக்காவை அவரின் முன்னாள் காதலர், அனூப் பிள்ளை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். ஏற்கனவே போலீசில் புகார் கொடுப்பேன் என கூறியபோது, அவர் இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என அழுது கெஞ்சி கேட்டதால் மன்னித்து விட்டேன்.

Breaking: அஜித் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சுற்று பயணத்திற்கு.. என்ன பெயர் தெரியுமா?

35

"இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன்.  ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து சமாளித்து விட்டார். போலீசார் தன்னுடன் இருப்பதால் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் இந்த மனிதன் என்னை விட்டு பிரியத் தயாராக இல்லை. நாங்கள் நண்பர்கள், அதில் சந்தேகமில்லை. எனது போனை உடைத்துவிட்டார். அதனால் என்னால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு வரும் அனைத்து மெசேஜையும் படித்தார். நான் படப்பிடிப்புக்கு கிளம்பி செல்ல இருந்த போது , என் மேலே ஏறி அமர்ந்து என்னுடைய முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

45

முகம் வீங்கி, காயமாகினால் என்னால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்பதற்காகவே அப்படி செய்தார். என்பதை நாடியை அனிக்கா விக்ரமன் தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம், வீங்கிய முகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே போல் அவரின் முன்னாள் காதலர் தன்னை தாக்குவதற்கு முன் எடுத்த சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!

55

தற்போது அனிக்கா முகங்களில் காயம் இருந்தாலும், சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல் இவரின் முன்னாள் காதலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் மீது FIR பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். நடிகை அனிக்காவின் நிலையை கண்டு ரசிகர்கள் தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories