பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முன்னணி நடிகர்களான, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.
சில தோல்வி படங்களால், தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்ட பரிதாப நிலையில் இருந்த இவரை, இவரின் நண்பர் ஒருவர் தான் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார்.
தற்போது எழுந்து உட்காரு அளவுக்கு தேறியுள்ள இவரால்... நீரிழிவு நோயின் பாதிப்பின் காரணமாக கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு காலில் உள்ள சதை சிதைந்து, எலும்பு தெரியும் அளவிற்கு இருப்பதாகவும், எனவே இவரின் மேல் சிகிச்சைக்கு உதவி வேண்டும் என இவரின் நண்பர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகியது.