ரிப்பீட் மோடில் நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட் விபத்துகள்.. கடந்த 3மாதத்தில் இத்தனையா! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்

Published : Mar 06, 2023, 02:37 PM IST

படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்கள் நடப்பதும் அதில் நடிகர், நடிகைக மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் காயமடைவதும் சமீபகாலமாக தொடர்கதை ஆகி வருகிறது. அப்படி கடந்த 3 மாதங்களில் சினிமா படப்பிடிப்பின் போது நடந்த விபத்துக்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
ரிப்பீட் மோடில் நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட் விபத்துகள்.. கடந்த 3மாதத்தில் இத்தனையா! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்

விடுதலை

வெற்றிமாறனின் இயக்கிய விடுதலை படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தபோது, அதில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

27

அச்சம் என்பது இல்லையே

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே. இப்படத்தின் நாயகன் அருண் விஜய், ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்த பின்னரே அவர் அதிலிருந்து மீண்டார்.

37

பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்தபோது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். படகின் மீது அவர் ஓட்டி வந்த ஜெட்ஸ்கீ மோதியதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது படிப்படியாக குணமாகி வருகிறார்.

47

மார்க் ஆண்டனி

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் கடந்த மாதம் இரண்டு விபத்துக்கள் நடந்தன. ஒன்றில் லாரி ஒன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து லைட்மேன் ஒருவர் மீது இரும்பு கம்பி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்... தெலுங்கு பர்ஸ்ட்.. தமிழ் நெக்ஸ்ட்! ஜூனியர் NTR-க்கு ஜோடியான ஜான்வி கபூர்- முதல் படத்துக்கே இவ்ளோ கோடி சம்பளமா?

57

விஜய் விஸ்வா

தமிழில் டூரிங் டாக்கீஸ், கொம்புவச்ச சிங்கம்டா, சாகசம் போன்ற படங்களில் நடித்த விஜய் விஸ்வா, தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் பைக் மீது ஏறி குதிக்கும் ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது கீழே விழுந்ததில் விஜய் விஸ்வாவின் கை முறிந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

67

ஏ.ஆர்.அமீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மியூசிக் வீடியோ ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அங்கு கிரேனின் உதவியுடன் தொங்கிக் கொண்டிருந்த கம்பி அருந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன் உள்பட அனைவரும் காயம் ஏதும் இன்றி தப்பித்தனர்.

77

அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிரபாஸின் பிரம்மாண்ட படமான புராஜெக்ட் கே-வில் நடித்தபோது விபத்தில் சிக்கினார். ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைந்தது. இதனால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சைக்கு பின் ஓய்வெடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!

Read more Photos on
click me!

Recommended Stories