‘சிந்து சமவெளி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் அமலாபால். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியான போது இவர் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனமே இவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
24
அமலாபால் - ஏ.எல்.விஜய் விவாகரத்து
தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘தலைவா’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்குளுடன் இணைந்து நடித்தார். ‘தலைவா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் அமலாபாலுக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பின்னர் சில படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு ஜெகத் தேசாய் என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
34
அமலாபாலின் இரண்டாவது திருமணம்
இவர்களின் திருமணம் கத்தோலிக்க முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவருடன் வெளிநாடு செல்வது, டூர் செல்வது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தார். திருமணம் ஆன சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதனால் அமலாபால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்ற பேச்சுகளும் எழுந்தது. இந்த நிலையில் அமலா பாலுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘இலை’ என பெயர் வைத்திருப்பதாக அமலாபால் அறிவித்தார்.