ஐஸ்வர்யா ராய் நிராகரித்து, பிளாக்பஸ்டர் ஆன 8 படங்கள் எது தெரியுமா?

Published : May 26, 2025, 03:05 PM IST

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடிக்க மறுத்துள்ளார். பின்னாளில் அந்த படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அப்படி ஐஸ்வர்யா நடிக்க மறுத்து, வெற்றி பெற்ற 8 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
18
1. குச் குச் ஹோதா ஹை (1998)

இந்தப் படத்தில் டினா மல்ஹோத்ரா கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு கரண் ஜோஹர் வாய்ப்பு வழங்கினார். ஆனால், தனது பிம்பத்தைப் பற்றி கவலைப்பட்டு, ஐஸ்வர்யா ராய் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ராணி முகர்ஜி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

28
2. கஹோ நா பியார் ஹேன் (2000)

ரித்திக் ரோஷன் அறிமுகமான இந்த படத்தை ஐஸ்வர்யா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக அமீஷா படேல் அந்த வேடத்தில் நடித்து அசத்தினார். பின்னாளில் ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், ‘தூம் 2’, ‘ஜோதா அக்பர்’ போன்ற படங்களில் நடித்தார்.

38
3. கதர்: ஏக் பிரேம் கதா (2001)

அனில் சர்மா இயக்கத்தில், சன்னி தியோல் ஹீரேவாக நடித்த கதர்: ஏக் பிரேம் கதா ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டார். அவருக்குப் பதிலாக அமீஷா படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

48
4. முன்னா பாய் எம்பிபிஎஸ் (2003)

சஞ்சய் தத்தின் இந்த வெற்றிப் பெற்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை முதலில் ஐஸ்வர்யாவுக்கு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி வழங்கினார். ஆனால் ஐஸ்வர்யா இந்த வாய்ப்பை மறுத்த நிலையில், அது கிரேசி சிங்கிற்குச் சென்றது.

58
5. வீர்-ஜாரா (2004)

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க யாஷ் சோப்ரா முதலில் ஐஸ்வர்யாவை அணுகினார். இந்த கதாபாத்திரம் மிகவும் உணர்ச்சிவசமாக இருப்பதாக கூறிய ஐஸ்வர்யா, ஷாருக்கான் நடிக்கும் இந்தப் படத்தை மறுத்துவிட்டார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஜிந்தா நடித்தார்.

68
6. பூல் புலையா (2007)

இயக்குனர் பிரியதர்ஷனின் முதல் தேர்வாக ஐஸ்வர்யா இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஐஸ்வர்யாவுக்குப் பதிலாக வித்யா பாலன் நடிக்க வைக்கப்பட்டார்.

78
7. தோஸ்தானா (2008)

ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்த இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குனர் தருண் மன்சுகானி முதலில் ஐஸ்வர்யாவுக்கு வழங்கினார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்ட காரணத்தால் பிரியங்கா சோப்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

88
8. பாஜிராவ் மஸ்தானி (2015)

இந்த படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஐஸ்வர்யா மற்றும் சல்மானை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் ஐஸ்வர்யா நடிக்க மறுத்துவிட்டார், அவருக்குப் பதிலாக தீபிகா படுகோனே அந்த வேடத்தில் நடிக்க, சல்மானுக்கு பதிலாக ரன்வீர் சிங் நடித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories