பச்சை நிற உடையில்... லைட்டாக இடையை காட்டி இளம் நெஞ்சங்களை இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

First Published | Aug 7, 2021, 12:53 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், செம்ம ஸ்டைலிஷ் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

aishwarya rajesh

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

aishwarya rajesh

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். பல நடிகைகள் நடிக்க அஞ்சிய இந்த கதாபாத்திரம் தான் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

Tap to resize

aishwarya rajesh

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

aishwarya rajesh

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

aishwarya rajesh

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில், திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள 'பூமிகா' என்கிற திகில் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

aishwarya rajesh

அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகிக்கொண்டே செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பச்சை நிற ஹாட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!