ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு மூத்த மகனான ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜு நடித்து வந்த நிலையில் , ஒரு சில காரணங்களால் தற்போது தொகுப்பாளர் அக்னி நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில், பாவாடை தாவணி மற்றும் புடவையில் வலம் வரும் பட்டாம் பூச்சியாய் நடித்து வரும் ஹீரோயினாக ஷபானா ஷாஜகான் நடித்து வருகிறார்.
ஆதி - பார்வதி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அதே போல் ஒவ்வொரு வாரமும், டி.ஆர்.பி-யிலும் பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டி வருகிறது இந்த சீரியல்.
தற்போது செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா சமீபத்தில் காதல் சர்ச்சையில் சிக்கினார். இவர் விஜய் டிவி சீரியல் பிரபலத்தை காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கிய லட்சுமிக்கு மூத்த மகனாக, செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஆரியனை தான் இவர் காதலித்து வருகிறாராம்.
சில மாதங்களுக்கு முன், ஆரியனிடம் அவரது ரசிகை ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு, அந்த கேள்வியை ஷபானாவுக்கு டேக் செய்து என்ன சொல்ல வேண்டும் என கேட்டிருந்தார். இதற்க்கு சாமானை 'என்னுடையது' என கூறியது இவர்களது காதல் சர்ச்சையை உறுதிப்படுத்தியது.
பின்னர் இருவரும் டேட்டிங், செய்து வந்த நிலையில்... தற்போது ஆர்யன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது போல், ரிங் போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'அவளுடைய ஆன்மாவில் தான் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஏதாவது ஒரு நாள் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி குறையும். வெளிப்புற அழகும் குறையும். ஆனால் ஆன்மாவிற்கு வயது இல்லை, அது வாழ்ந்து கொண்டு இருக்கும். இது அன்பு வாழும் இடம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஷபானா "நீங்கள் எப்போதுமே தஹனனை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை" என்று பதில் கூறியுள்ளார். எனவே இவர்களுக்கு நிச்சயமாகி இருக்கலாம், விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பல சீரியல் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .