Published : Aug 06, 2021, 05:13 PM ISTUpdated : Aug 06, 2021, 05:15 PM IST
சட்டமன்ற தேர்தலின் போது... அரசியல் பிரவேசத்தில் படு பிசியாக இருந்த நடிகை குஷ்பு, தற்போது... மீண்டும் சீரியல், மற்றும் திரைப்படங்கள் என பிசியாகி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஹீரோயின் போல் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.
210
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.
310
சினிமாவில் பிசியாக சுழன்றுவந்த இவர் திடீர் என, பாஜக கட்சியில் இணைந்து, ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
410
அடுத்தவர்களை பற்று குறை கூறி வாக்கு சேகரித்தவர்கள் மத்தியில், வீடு வீடாக சென்று, நான் ஜெயித்தால் தன்னுடைய சொந்த பணத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக கூறினார்.
510
ஆனால் இவரால் அந்த தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போனது... பாஜக தொண்டர்களுக்கும் வருத்தம் தான்.
610
அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும், தற்போது திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வங்கியில் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
710
அதே போல் கோகுலத்தில் சீதை என்கிற சீரியலிலும் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
810
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
910
அந்த வகையில், உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள குஷ்பு புகைப்படங்கள் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
1010
இந்த வயதிலும் யங் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் குஷ்பு ஜொலிப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.