Aathmika : உடலோடு ஒட்டி இருக்கும் கருப்பு நிற டைட் உடையில்... ஓப்பனாக தொடை அழகை காட்டி அதகளம் பண்ணும் ஆத்மிகா

First Published Jan 16, 2022, 6:03 PM IST

கருப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடிகை ஆத்மிகா (Aathmika) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, இப்படத்திற்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 

இதையடுத்து டீகே இயக்கிய காட்டேரி என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஆத்மிகா நடித்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.

சமீபத்தில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா. இதிலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

தற்போது ஆத்மிகாவின் கைவசம் கண்ணை நம்பாதே படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். 

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது குட்டை டவுசருடன் டைட்டான கருப்பு நிற டீசர்ட் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

click me!