தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்றுடன் முடிய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.