அடுத்த சந்ததிக்கு பல மர கன்றுகளை பூமியில் நட்ட... ஆலமரம் சாய்ந்து விட்டதே..! கண்ணீர் சித்தும் ரசிகர்கள்..!

First Published | Apr 17, 2021, 8:37 AM IST

காமெடி மூலம், சமூக கருத்தை வலியுறுத்தியதுடன் தன்னுடைய வாழ்க்கையிலும் அதனை நடைமுறை படுத்தியவர் விவேக். அதற்க்கு மிக பெரிய உத்தரம்.... தன்னை தொடர்ந்து வரும், அடுத்த சந்ததிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள கூடாது என, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி மர கன்றுகளை நட முடிவு செய்தார்.

நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இதயத்தின் இடதுபுற குழையில் 100 சதவீத அடைப்பு இருந்ததை நீக்கி, மருத்துவர்கள் தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 :35 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இழப்பு ரசிகர்களாலும், பிரபலன்களாலும் தற்போது வரை நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
Tap to resize

காமெடி மூலம், சமூக கருத்தை வலியுறுத்தியதுடன் தன்னுடைய வாழ்க்கையிலும் அதனை நடைமுறை படுத்தியவர் விவேக். அதற்க்கு மிக பெரிய உத்தரம்.... தன்னை தொடர்ந்து வரும், அடுத்த சந்ததிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள கூடாது என, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி மர கன்றுகளை நட முடிவு செய்தார்.
அப்துல் கலாம் அவர்களின் மீத பற்றின் காரணமாகவே... மரம் நடுவதை தொடர்ந்து கடைபிடித்து வந்தார் விவேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என வலியுறுத்திவர்.
அதே போல் பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தவர்.
விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஊக்குவித்தவர்.
தற்போது மரக்கன்றுகள் நடவு செய்தால் மட்டும் தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம் என வேதனை வார்த்தைகளை உதித்தவர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும் என ஆணித்தனமாக தன்னுடைய பேட்டிகளில் தொடர்ந்து கூறி வந்தவர்
எவ்வளவு பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், மரம் நட வேண்டும் என யார் அழைத்தாலும் குழந்தை போல் தயாராகி வைத்து நிற்கும் உன்னதமான மனிதன்.
மரங்­களை வெட்டுவதன் மூலம் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என தான் கலந்து கொள்ளும் மரம் நடும் விழாக்களில் தெரிவித்தவர்.
நாம் நடும் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு உயிர்க்காற்றுக் குழாய் போல நம் உயிர்காக்கும் தோழனாக இருக்கும். நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு உயிர்க்காற்று தேவை. எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும் என நினைத்த ஈடு இணையில்லா.
தமிழகத்தில் அதிகளவில் மரங்­ களை நட்டு நீர்வளத்தையும் பசுமையையும் பாதுகாக்க வேண்டும் என அடுத்த சந்ததிகளுக்காக யோசித்து, பல மரங்களை மண்ணில் விதைத்த ஆலமரம் இன்று அமைதியாக உறங்க சென்றுவிட்டது என பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!