100 வருஷம் ஆனாலும் மதுரை மக்கள் இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டாங்க - விஷால் புகழாரம்

Published : May 18, 2025, 12:24 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், மதுரை மக்களைப் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

PREV
14
Vishal Madurai Visit

நடிகர் விஷால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும். எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன்.

24
19 ஆண்டுகளுக்கு பின் மதுரை வந்த விஷால்

2006இல் திமிரு பட சூட்டிங் போது வந்தேன். 19 வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டேன். நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும்.

34
மதுரை மக்களைப் பற்றி விஷால் சொன்னதென்ன?

இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம், நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. மதுரை மக்கள் 2 விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம் மற்றொன்று உணவு, இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும் என்றார்.

44
விரைவில் விஷால் திருமணம்

நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற ஒரு முடிவில் தீர்க்கமாக உள்ளார். இந்த நிலையில், தற்போது நடிகர் சங்க கட்டிடம் இன்னும் சில மாதங்களில் திறக்கப்பட உள்ளதால், விஷால் தன்னுடைய திருமணமும் விரைவில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories