மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் நடித்த கமல்ஹாசன், அதன்பின்னர் 38 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லெட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
25
தக் லைஃப் டிரெய்லர்
தக் லைஃப் திரைப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் இருந்த நிலையில், தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். படம் பார்த்தால் கிடைக்கும் கூஸ் பம்ப்ஸ் இந்த டிரெய்லரிலேயே கிடைக்கிறது. இதில் அனைத்து கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருந்தாலும் சில தகவல்கள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. சொல்லப்போனால் தக் லைஃப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் டிரெய்லரில் சொல்லி இருக்கிறார்கள்
35
தக் லைஃப் கதை என்ன?
ரங்கராய சக்திவேல் என்கிற கேங்ஸ்டராக வரும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகன் தான் சிம்பு. தன் முதுகில் குத்தும் வளர்ப்பு மகன் சிம்புவை கமல்ஹாசன் திரும்பி வந்து பழிவாங்குவது தான் தக் லைஃப் படத்தின் கதைச்சுருக்கம். இதில் கமல்ஹாசனின் மனைவியாக அபிராமி நடித்துள்ளார். மேலும் அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனின் டீ ஏஜிங் காட்சியும் இடம்பெற்று உள்ளது. அதைப் பார்க்கும் போது நாயகன் பட கமலை பார்ப்பது போல் உள்ளது.
தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸ் ஆன பின்னர் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது திரிஷாவின் கேரக்டர் தான். அவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரெய்லரில் கமல்ஹாசன் உடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகளை பார்க்கும் போது அவர் நிச்சயம் கமலின் மகளாக நடித்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. ஒருவேளை கமலின் கள்ளக்காதலியாக நடித்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
55
கமலின் லிப் லாக் காட்சி
விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்திருந்த கமல்ஹாசனும் அபிராமியும், அதன்பின்னர் தக் லைஃப் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படத்தில் ரொமான்ஸ் இருக்குமா என டவுட்டில் இருந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு லிப்லாக் காட்சி மூலம் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்கள். 70 வயதிலும் ரொமான்ஸில் புகுந்து விளையாடி இருக்கிறார் கமல். இதுதவிர படத்தில் இன்னும் சில ஆச்சர்யங்கள் நிரம்பி இருக்கின்றன. அது படம் வெளியாகும் போது தெரியவரும்.