vishal : 3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் கிடைத்த வெற்றி... படப்பிடிப்பு தளத்தில் தடபுடலாக கொண்டாடிய விஷால்

Ganesh A   | Asianet News
Published : Mar 21, 2022, 10:30 AM IST

vishal : நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றதை நடிகர் விஷால் கொண்டாடி உள்ளார். லத்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் விஷால்.

PREV
14
vishal : 3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் கிடைத்த வெற்றி... படப்பிடிப்பு தளத்தில் தடபுடலாக கொண்டாடிய விஷால்

நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை ஐக்கோர்ட் தடை விதித்தது.

24

வாக்கு எண்ணிக்கை

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாண்டவர் அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.

34

பாண்டவர் அணி வெற்றி

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மொத்த முள்ள 29 பதவிகளையும் அந்த அணியே கைப்பற்றியது. இதன்மூலம் நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளர் ஆக வெற்றி பெற்றுள்ளார். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் படுதோல்வி அடைந்தனர்.

44

விஷால் கொண்டாட்டம்

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றதை நடிகர் விஷால் கொண்டாடி உள்ளார். லத்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் விஷால், அவருக்கு மாலை அணிவித்து படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்.... Beast movie : அரபிக் குத்து சாதனையை கிட்ட கூட நெருங்க முடியாத ஜாலியோ ஜிம்கானா! விஜய் பாட்டுக்கு மவுசு இல்லையா?

Read more Photos on
click me!

Recommended Stories