Beast movie : அரபிக் குத்து சாதனையை கிட்ட கூட நெருங்க முடியாத ஜாலியோ ஜிம்கானா! விஜய் பாட்டுக்கு மவுசு இல்லையா?

First Published | Mar 21, 2022, 9:50 AM IST

Beast movie : ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோ அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏப்ரலில் பீஸ்ட் ரிலீஸ்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியிடப்பட்டது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். 

சாதனை படைக்கும் அரபிக் குத்து

அரபிக் குத்து பாடல் வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வெளியான 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைப்பெற்ற லிரிக்கல் வீடியோ என்கிற சாதனையை படைத்த அரபிக் குத்து பாடல் முதல் நாளில் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதேபோல் வேகமாக 200 மில்லியன் பார்வைகளைப்பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அண்மையில் படைத்தது.

Tap to resize

ஏமாற்றம் அளித்த ஜாலியோ ஜிம்கானா

இதனிடையே பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. விஜய் பாடியிருந்த இப்பாடலுக்கு கு.கார்த்திக் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இதன் லிரிக்கல் வீடியோ அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அரபிக் குத்தை நெருங்க முடியவில்லை

அதன்படி ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் அரபிக் குத்து பாடல் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. விஜய் பாடியும் இப்பாடலுக்கு மவுசு இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... Master movie Actress : மெசேஜ் அனுப்பி படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்... மாஸ்டர் பட நடிகை அளித்த ‘நறுக்’ பதில்

Latest Videos

click me!