Published : Feb 13, 2025, 06:22 PM ISTUpdated : Feb 13, 2025, 06:30 PM IST
தயாரிப்பாளரும், கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமாரின் கருத்துக்கு, மலையாள நடிகர் விநாயகர் சீரியபடி பதிலடி கொடுத்துள்ளது தற்போது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரின் சர்ச்சை கருத்து:
குறைந்த பட்ஜெட்டில் நிறைய நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை மலையாள திரையுலகம் மகிழ்வித்து வருவதாக ஒருபக்கம் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மலையாள படங்களை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கடந்த 2 ஆண்டுகளாக மலையாளத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
25
தயாரிப்பாளர் G. சுரேஷ்குமார்:
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ்குமார், சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசும்போது... "மலையாள திரையுலகை பொறுத்தவரை, தயாரிப்பாளர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய மோசமான சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக மலையாள சினிமா எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். அவர்கள் சம்பளத்தை குறைக்காமல் எங்களால் முன்னேற முடியாது என கூறினார்.
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விட்டதாக தம்பட்டம்:
அதேபோல் அவர்களே தங்களுடைய படங்கள் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விட்டதாக தம்பட்டம் அடித்து கொள்கின்றனர். இவர்களால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என பேசி இருந்தார். அதே போல் நடிகர்களே தயாரிப்பாளராக களமிறங்குவது சரியானதாக இருக்காது என இவர் கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்கு பதிலடி கொடுப்பது போல்... தமிழில் திமிரு, மரியான், மரியான் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் விநாயகன் சீரியபடி பதில் கொடுத்துள்ளார்.
45
தயாரிப்பாளர் ஜி சுரேஷ் குமாருக்கு விநாயகன் பதிலடி:
இதுகுறித்து கூறுகையில், "சினிமா என்ன உங்க குடும்ப சொத்தா? நீங்கள் முதலில் உங்கள் மனைவி மற்றும் மகளிடம் சொல்லி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள். நான் ஒரு திரைப்பட நடிகர். நான் விரும்பினால் திரைப்படத்தில் நடிப்பதை தவிர, ஒரு படத்தை தயாரிக்கவும், இயக்கவும், விநியோகிக்கவும் முடியும். இது இந்தியா ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார். தற்போது சமூக வலைதளத்தில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
55
தயாரிப்பாளர் சுரேஷ் குமார் யார்?
விநாயகன் சர்ச்சனையான பிரபலமாக இருந்தாலும், அவர் சொல்லுவதில் என்ன தவறு என பலர் தயாரிப்பாளர் சுரேஷ் கருத்தை ஆமோதித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் 1993 ஆம் ஆண்டு ரேவதி சாலமந்தர் என்ற பேனரை துவங்கி, தன்னுடைய படங்களை தயாரித்து வருகிறார். திரையுலகில் உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, பின்னர் தயாரிப்பாளராக மாறியவர். அதே போல் கேரளா திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.