தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், குணச்சித்திர வேடம், வில்லன் என வெளுத்து வாங்கி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தற்போது விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' ஆகிய படங்களில் முரட்டு வில்லனாக மிரட்டியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜெசி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்கிற மகன் மற்றும் ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, 2015 ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில், விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து சிந்துபாத், ஜூங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தன்னுடைய தந்தையுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு முன்பை விட குண்டாக உள்ளார் சூர்யா.