சூர்யா 41 கைவிடப்பட்டதா? உண்மையை போட்டோவில் சொன்ன நாயகன்!

Kanmani P   | Asianet News
Published : May 26, 2022, 04:35 PM IST

சூர்யா 41 படம் தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாயகன் ட்வீட் செய்துள்ளார்.

PREV
14
சூர்யா 41 கைவிடப்பட்டதா? உண்மையை போட்டோவில் சொன்ன நாயகன்!
suriya 41

பிரபல இயக்குநரான பாலா தற்போது நடிகர் சூர்யாவின் 41 ஆவது படத்தை இயக்கி வருகிறார்.  இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சூர்யாவின் 2 டி என்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். நந்தா, பிதாமகன் என இரண்டு ஹிட் படங்களில் இணைந்த ஜோடிகளின் புதிய முயற்சி குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

24
suriya 41

சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவனாக சூர்யா நடிக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்றதாகவும் தகவல் பரவியது. 

34
suriya 41

இதையடுத்து இந்த தகவலை மறுத்த படக்குழு இராண்டாவது கட்டப்படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாக அறிவித்தது. அனாலும் மீண்டும் பாலா - சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதால் படம் ட்ராப் ஆனதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

44
SURIYA 41

இந்நிலையில் டிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் பாலாவும் படப்பிடிப்பில் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு “நாங்கள் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறோம்.” என்று பதிவிட்டு இருக்கிறார். 

Read more Photos on
click me!

Recommended Stories