Tamil Comedy Actor Bonda Mani : இதயநோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Kanmani P   | Asianet News
Published : May 26, 2022, 03:21 PM IST

Tamil Comedy Actor Bonda Mani : பிரபல நகைசுவை நடிகர் போண்டா மணி தீவிர இதயநோய் காரணமாக அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
13
Tamil Comedy Actor Bonda Mani : இதயநோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
bonda mani

வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார் போண்டா மணி. இலங்கையை சேர்ந்தவர்  இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது, ​​ஒரு நிகழ்ச்சிக்காக அந்நாட்டுக்குச் சென்ற இயக்குனர் கே.பாக்யராஜுடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து அவர் பவுன்னு பவுனுதான்  திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

23
bonda mani

270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் பணியாற்றியுள்ள இவர் கடந்த  2016 -ல்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி இணைந்தார். முன்னதாக . கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்காக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்  போண்டாமணி.

33
bonda mani

காமெடியால் ரசிகர்களை கவர்ந்த போண்டா மணி தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 58 வயதாகும் போண்டா மணிக்கு திடீரென  இன்று இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

click me!

Recommended Stories