நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, தந்தையின் தயவோடு சினிமாவில் நுழைந்தாலும், அதன்பின்னர் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று டாப் ஹீரோவாக வலம் வருகிறார். நடிகர் சூர்யாவுக்கு தற்போது 49 வயது ஆகிறது. ஆனால் இன்றளவும் இளமை மாறாமல் இருப்பதற்கு அவரின் டயட் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். நடிகர் சூர்யா வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இருந்து சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறினார். அப்படம் ரிலீஸ் ஆகி 17 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது வரை சிக்ஸ் பேக்ஸை மெயிண்டெயின் செய்து வருகிறார் சூர்யா.
24
Suriya Fitness
அண்மையில் கங்குவா படத்தில் கூட அவர் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் காட்சியளித்தார். இப்படி தான் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாற 100 நாட்கள் டயட் பிளான் ஒன்றை பாலோ செய்வதாக சூர்யா கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் பேசுகையில், எனக்கு 49 வயது ஆகிறது. இந்த வயதில் உடலில் மெடபாலிசம் குறைய ஆரம்பிக்கும். அதனால் இந்த வயதில் நிறைய கார்டியோ ஒர்க் அவுட் செய்ய வேண்டும். அதோடு கேலரி டெபிசிட் டயட்டையும் பாலோ பண்ண வேண்டும்.
நான் என் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க 100 நாள் டயட் பிளான் ஒன்றை பாலோ செய்து வருகிறேன். இந்த 100 நாட்களிலும் எந்தவித பவுடர் அல்லது மருந்துகள் எடுக்காமல் இயற்கையாகவே சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு நான் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறினேன் என சூர்யா தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு மிகவும் பிடித்த உணவு எது என்பதையும் அந்த பேட்டியில் ஷேர் செய்துள்ளார் சூர்யா. அவருக்கு கொங்கு பிரியாணி என கூறப்படும் அரிசி பருப்பு சாதம் தான் மிகவும் பிடிக்குமாம்.
44
Suriya Upcoming Movies
இப்படி 49 வயதிலும் ஹெல்தியாக இருக்கும் நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படமும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.