மதுரை சுமார் 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், கட்டப்பட்டுள்ளது கீழடி அருங்காட்சியகம். தமிழர்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்க்கை, நாகரீகம் போன்றவற்றை, உலக மக்கள் தெரிந்த கொள்ளும் வகையில் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில், கீழடியில் 2018ம் ஆண்டு முதற்கொண்டு... தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வில், கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள், மணிகள், ஆயுதங்கள், அக்கால மனிதர்களின் அணிகலன்கள், போன்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கதாநாயகனாக வெற்றி கண்ட சூரி..! விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
உலக தரம் வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 5-ம் தேதி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தினம் தோறும் ஆயிரக்கனமான மக்கள், பள்ளி குழந்தைகள் என பலரும், நாள்தோறும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து செல்லும் நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் இன்று விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா மனைவி மற்றும் குழந்தைகளுடன் கீழடியை பார்வையிட வந்த போது, அவர்களுடன் சிவகுக்காரும் வந்திருந்தார். இதன் மூலம் தந்தை - மகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இப்படி பரவிய தகவல்கள் அனைத்தும் கட்டு கதை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கீழடி அருங்காட்சியகத்தின் பார்வை நேரம் 10 மணி என்பதால், அதற்க்கு முன்னதாகவே சூர்யாவின் குடுமபத்தினர் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதித்தனர். இவர்கள் பார்வையிட்டுவிட்டு வெளியே வர, 10 மணிக்கு மேல் ஆன நிலையில், பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா - ஜோதிகா குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியை பார்வையிட்டபோது அமைச்சர் சு.வெங்கடேசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலெக்ஷனின் மாஸ் காட்டும் சிம்புவின் 'பத்து தல'... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சிய இரண்டாவது நாள் வசூல்!