ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் சறுக்கலை சந்தித்தது. சிவா இயக்கியிருந்த இப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அவருக்கு பல்வேறு இயக்குனர்கள் கதை சொன்னாலும் இறுதியில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனை தேர்வு செய்தார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களை பெற்றதால் கலக்கமடைந்த ரஜினி, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
பின்னர் அனிருத் அவரை சமாதனப்படுத்தியதை அடுத்து நெல்சனுடனே தொடர்ந்து பணியாற்ற சம்மதித்தார் ரஜினி. இருப்பினும் அவரை நம்பி படத்தின் முழு பொறுப்பையும் ஒப்படைக்க விரும்பாத ரஜினி, தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரையும் இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க களமிறக்கி உள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கதைப்படி ரஜினியின் இளம் வயது கதாபாத்திரமும் உள்ளதாம், ஏற்கனவே கபாலி, பேட்ட போன்ற படங்களிலும் அத்தகைய கதாபாத்திரங்களில் ரஜினியே நடித்திருந்தாலும், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவு செய்துள்ளாராம். ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி படத்தில் அவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ‘அந்த’ ஊசி போட்டு மார்பகத்தை பெரிதாக்க சொன்னாங்க... பகீர் தகவலை வெளியிட்ட ரஜினி பட ஹீரோயின்