மீண்டும் தள்ளிப்போன யானை ரிலீஸ்..கமலை சந்தித்த கையோடு படக்குழு வெளியிட்ட செய்தி!

Kanmani P   | Asianet News
Published : Jun 13, 2022, 07:50 PM IST

விக்ரம் வெற்றிக்காக கமலை வாழ்த்திய கையோடு 'யானை' படத்தின் வெளியீட்டில் செய்துள்ள மாற்றம் குறித்து  தயாரிப்பாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

PREV
13
மீண்டும் தள்ளிப்போன யானை ரிலீஸ்..கமலை சந்தித்த கையோடு படக்குழு வெளியிட்ட செய்தி!
Yaanai

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ' யானை ' படத்தின் வெளியீடு ஜூன் 17ம் தேதியிலிருந்து   ஜூலை 1, 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  'யானை' படத்தின் பின்னணி பணிகள் முடிவடையாத காரணத்தால் தான் வெளியீட்டைத் தயாரிப்பாளர்கள் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.அதோடு  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வரவேற்பை மனதில் கொண்டும் தள்ளிப்போனதாம் யானை. இந்த செய்தியை கமலை சந்தித்து வாழ்த்து சொன்ன கையோடு படக்குழு வெளியிட்டுள்ளது.

23
YAANAI

கிராமப்புற பொழுதுபோக்காக இருக்கும் இப்படத்தில் ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட்டுகள் சம அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், குக்கு வித் கோமாளி ராஜேந்திரன் ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ராமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

33
yaanai movie

இந்த படத்தில் பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன்  படத்தில் ஜோதிடராக நடிக்கிறார். ராமேஸ்வரம், பழனி, தூத்துக்குடி, காரைக்காடு, நாகூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சக்தி வெங்கட் ராஜா கலைப் பணிகளை மேற்கொள்கிறார். உறவினர்களான அருண்விஜய் ,ஹரியின் கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories