நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட்..இளையராஜா - யுவனுடன் முதல் முறையாக மாநாடு இயக்குனர்!

Kanmani P   | Asianet News
Published : Jun 13, 2022, 05:58 PM IST

வெங்கட் பிரபுவுடன் இளையராஜாவின் ஸ்டுடியோவில் இருந்து ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாகசைதன்யா -வெங்கட் பிரபு குறித்த  இது யூகங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

PREV
13
நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட்..இளையராஜா - யுவனுடன் முதல் முறையாக மாநாடு இயக்குனர்!
NC22

'மாநாடு', 'மன்மத லீலை' படங்களின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து அடுத்த படத்தைத் தயாரிக்கிறார். கடைசியாக பங்கர்ராஜூ படத்தை தொடர்ந்து  நாக சைதன்யா தனது 22வது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படம் நாக சைதன்யாவின் முதல் தமிழ்ப் படம் மற்றும் வெங்கட் பிரபுவின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, வெங்கட் பிரபு ட்விட்டரில் நாக சைதன்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தை அறிவித்தார்.

23
NC 22

தற்போது இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இப்படத்தின் பாடல் பதிவு ஜூன் 12ஆம் தேதி சென்னையில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தொடங்கியுள்ளதாக தகவல் சொல்கிறது. இந்த செய்தி மூலம் வெங்கட் பிரபு தனது பெரியப்பா  இளையராஜாவுடன் இணைந்து படமெடுப்பது இதுவே முதல் முறை. இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது.

33
NC 22

வெங்கட் பிரபுவுடன் இளையராஜாவின் ஸ்டுடியோவில் இருந்து ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இது யூகங்களை உறுதிப்படுத்தியது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை. முன்னதாக, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து 'மாமனிதன்' படத்திற்காக பணியாற்றினர். மேலும் அப்பா-மகன் இரட்டையர்களின் இசையமைப்பைக் கேட்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories