திருமண நாளன்று மனைவியுடன் ஜோடியாக போட்டோஷூட் நடத்திய சிவகார்த்திகேயன் - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

First Published | Aug 28, 2022, 9:49 AM IST

Sivakarthikeyan : கோலிவுட்டில் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே திருமணம் செய்துகொண்டார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்த சிவகார்த்திகேயன், பின்னர் அது இது எது, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் வெளியான மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதன்பின்னர், இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மனம் கொத்தி பறவை ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதன்மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். இவர் நடித்தால் படம் நிச்சயம் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு வரிசையாக வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... நண்பர்களோடு ஜாலியாக பைக் ட்ரிப் கிளம்பிய நடிகர் அஜித்! பைக்ல பஞ்ச் டயலாக்லாம் எழுதிருக்காரே - வைரலாகும் photos

Tap to resize

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரூ.100 கோடி வசூல் ஈட்டுவது என்பது ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உடைத்தெறிந்த பெருமையும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.

இவ்வாறு சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இத்தம்பதி தங்களது 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடினர். அப்போது மனைவியுடன் ஜோடியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார் சிவா, அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இத்தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் தாஸ் என்கிற மகனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இந்த மனசு யாருக்கு வரும்... கோலிவுட்டில் புது டிரெண்டை உருவாக்கிய நடிகர் கார்த்தி - பாராட்டும் ரசிகர்கள்

Latest Videos

click me!