தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடும் அளவுக்கு பேமஸ் ஆனவர் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனரான வம்சி பைடிபல்லி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷியாம், சம்யுக்தா, யோகிபாபு, குஷ்பு, எஸ்.ஜே.சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... காதலியை கரம்பிடிக்கிறார் ‘குக் வித் கோமாளி’ புகழ்... வெளியானது திருமண தேதி
வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் விஜய். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய இவர்கள் தற்போது தளபதி 67 படத்துக்காக மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம். இப்படத்தின் ஷூட்டிங் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ளது.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய், தற்போது சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் ஒன்றை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது. அந்த ஆடம்பர பிளாட்டை தனது அலுவலகமாக பயன்படுத்த விஜய் முடிவு செய்து உள்ளாராம். அதே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் ஆர்யாவும் ஒரு பிளாட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... கண்களை பெரிதாக்கி..குளியல் பாவாடை போன்ற உடையணிந்து மயக்கும் அமலா பால்