போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகலாம்.