அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!

Published : Feb 23, 2026, 07:34 PM IST

Singamuthu Struggling days No Money For Rice: அரிசி வியாபாரியாக இருந்த காலத்தில் சினிமா வாய்ப்புகளைத் தேடி அலைந்து, பின் காமெடி நடிகராக உருவெடுத்தார். அரிசி கடை எப்படி உருவானது என்பதை பற்றி ஒரு நேர்காணலில் சிங்கமுத்து கூறியுள்ளதை பார்க்கலாம்.

PREV
14
சிங்கமுத்துவின் குடும்ப வாழ்க்கை:

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து சினிமாவில் நுழையும் முன் சென்னையில் அரிசி கடை நடத்தி வந்தவர். தொழிலில் இருந்த அனுபவத்தையும், கஷ்டங்களையும் தாண்டி, காமெடி நடிகராக உயர்ந்து பல படங்களில், குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்தார். அரிசி வணிகத்திலிருந்து சினிமா நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். சிவகங்கையில் நாங்கள் ஒரு விவசாய குடும்பம். வருமானம் என்பது விவசாயம் மூலம் மட்டும் தான். வறுமையிலும் நான் பியுசி வரை படித்தேன். அதன் பிறகுகண்டக்டராக வேலை பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு வேலைகள் பார்த்துள்ளேன். 

24
நடிகர் சிங்கமுத்து

அதன் பிறகு திருச்சியில் ஒரு அரிசி மண்டியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு திருமணம் நடந்தது. மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்பினேன். ஏதேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அப்பொழுது காமெடி நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தன.1987-ல் "நேரம் நல்லா இருக்கு" திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரமனின் இயக்கத்தில் உருவாகிய சூர்ய வம்சம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நீ வருவாய் என, ராஜா ராணி போன்ற படங்களில் இவர் நடத்திருக்கிறார். 

34
சிங்கமுத்து தமிழ் சினிமா:

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தனது உடல்மொழி நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைப்பவர். இவர் யாரோடு இணைந்து நடித்தாலும் அந்தக் காமெடி தனித்துவமாகத் தெரியும். வடிவேலு, சந்தானம் உள்படப் பலருடனும் நடித்த இவரது காமெடி காட்சிகள் இப்போதும் சரவெடி சிரிப்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. வடிவேலுக்கும் சிங்கமுத்திற்கும் காம்போ தனித்துவமானது இவர்கள் இருவரும் சேர்ந்தால் அந்த காமெடி மிகவும் அருமையாகவே இருக்கும். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவரை ஏமாற்றிக் கொள்வதாகவும் கதை சூழல் அமைக்கப்பட்டிருக்கும் அது மிகவும் அருமையாக இருவரும் நடித்திருப்பார்கள் அது காலப்போக்கில் உண்மையாக மாறப்பட்டது.

44
அரிசி கடை கதை:

நான் சென்னையில் ஒரு சொந்தமாக அரிசி மண்டி ஒன்று வைத்தேன். சென்னைக்கு வந்த போது ஒரு காபி கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சினிமா துறையில் இருந்து பல பிரபங்கள் வந்து டீ சாப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் என்னை கண்டு கொள்ளவில்லை. அங்கு இருந்து காசுகளை சம்பாதித்துக் கொண்டு நானும் என் தம்பியும் காசு சேர்த்து ஒரு அரிசி கடை ஆரம்பித்தோம் கடை அட்வான்ஸ், தராசு எல்லாமே வாங்கிட்டேன். ஆனா வச்சிருந்த காசு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல அரிசி வாங்க காசு இல்ல. 

அப்ப நான் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். அதன் பிறகு ஆலந்தூர் அரிசி சந்தையில் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டேன். அவங்க நேர்ல வந்து கடையை பார்த்துட்டு நான் உனக்கு அரிசி தரேன் என்று சொன்னார். அதன்படி அவரும் கடைக்கு வந்து பார்த்த பிறகு என்னையும் என் தம்பியையும் நம்பி 150 மூட்டை அரிசி தந்தாங்க. அவங்க தந்த பிறகுதான் என் வாழ்க்கையில நான் முன்னுக்கு வந்தேன். ஒரே நாளில் முதலாளி ஆகிட்டேன். என்றெல்லாம் தான் உயர்வதற்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை கூறினார் நடிகர் சிங்கமுத்து.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories