"ஆளவிடுங்கடா சாமி" மாநாட்டிற்கு பின் மொத்தமா மாறிய சிம்பு - புதுசா எடுத்த ரெசலூஷன் என்ன தெரியுமா?

First Published | Sep 13, 2024, 6:30 PM IST

Actor Simbu : பிரபல நடிகர் சிம்பு இப்பொது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

Simbu and Parthiban

இளம் வயதிலேயே நடிப்பு 

1983ம் ஆண்டு பிறந்த நடிகர் சிம்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான "உறவை காத்த கிளி" என்ற படத்தில் தோன்றி தனது முதலாவது வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சிம்பு, கடந்த 2002ம் ஆண்டு வெளியான "காதல் அழிவதில்லை" என்ற படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான கோவில், மன்மதன், மற்றும் தொட்டி ஜெயா போன்ற படங்களில், சிம்புப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. 

தளபதி விஜயை போல பிற மொழிகளில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்ததை தவிர, நேரடியாக பிற மொழி படங்களில் இதுவரை சிம்பு நடித்ததே இல்லை. சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் பாடகராகவும் பல படங்களில் அசத்தியுள்ள நடிகர் சிம்பு அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றதுண்டு. திரைத்துறையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் சர்ச்சைகளை கிளப்பிய பெருமை சிம்புக்கு உண்டு.

நயன்தாராவுக்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. பதறிப்போய் அவரே வெளியிட்ட பதிவு - Fans உஷார்!

Simbu and Nayanthara

சர்ச்சை நாயகனான சிம்பு 

கடந்த 40 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகின்றார் நடிகர் சிம்பு, அவர் எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாரோ, அதே அளவிற்கு திரைத்துறையில் வெறுப்பையும் சம்பாரித்துள்ளார் என்றால் அது மிகையல்ல. சிம்பு என்றாலே ஒரு கட்டத்தில் லேட்டாக ஷூட்டிங் வருவது, படம் ஒப்புக்கொண்டு, அட்வான்ஸ் வாங்கிவிட்டி கால் சீட் கொடுக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளில் சிக்கினார். இந்த பிரச்சனை அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு படம் வரை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுஒருபுரம் என்றால், நடிகை நயன்தாராவால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் சிம்பு. ஒரு கட்டத்தில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவியது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம், நடிகர் சிம்புவின் "வல்லவன்" படத்தின் போஸ்டர் ஒன்று தான். வல்லவன் பட போஸ்டர் என்றதுமே பலருக்கு "அந்த" போஸ்டர் தான் முதலில் நியாபகம் வரும்.

Tap to resize

Actor Silambarasan

கூடா நட்பு 

நடிகர் சிம்பு தன்னுடைய திரைப்பட பணிகளை மேற்கொள்ள ஒழுங்காக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தால், அவர் தனது நண்பர்களோடு இணைந்து அதிக அளவில் பார்ட்டி மற்றும் பப் என்று அதிக அளவில் சுற்ற துவங்கியதாக சில தகவல்கள் அவ்வப்போது வெளியானது. குறிப்பாக "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், சரியாக ஓட கூட முடியாத அளவிற்கு அவருடைய உடல் எடை கூடியதும், அவர் சரிவர தனது உடலை கவனித்துக்கொள்ளாததால் தான் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 

தன்னுடைய நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்ட சிம்பு அவர்களோடு இணைந்து சுற்றுவதையே தலையாய கடமையாக கொண்டிருந்தாராம். உண்மையில் நடிகராக சிம்புவை இந்த விஷயங்கள் பெரிய அளவில் பாதித்தது. மாநாடு படத்தை தாண்டி, அவர் ஒரு தரமான ஹிட் படம் கொடுத்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது அவரது ரசிகர்களுக்கே வெளிச்சம்.

Thug Life Movie

புது ரெசலூஷன்

இந்த சூழ்நிலையில் தான் நடிகர் சிம்பு ஒரு புதிய கட்டுப்பாட்டை தனக்குத்தானே விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது மணிரத்தினத்தின் "தக் லைப்" திரைப்படத்தில் நடித்து வரும் அவர், விறுவிறுப்பாக அந்த திரைப்பட பணிகளை முடித்து வருகிறார். தொடர்ச்சியாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவும் திரைப்பட பணிகளையும் அவர் மேற்கொள்ள உள்ளார். 

இது மட்டுமல்லாமல் தனக்கு துன்பங்களை மட்டுமே வழங்கிய கூடாத நட்பில் இருந்த அனைத்து நண்பர்களிடமிருந்தும் அவர் தற்பொழுது விலகியே இருப்பதாகவும், அவரோடு இளம் வயதிலிருந்து உடன் வரும் பிரபல நடிகர் மகத் மட்டும் தான் இப்போது அவருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேவையற்ற நட்புகளை முற்றிலும் தவிர்த்து, தனது கலை உலக பயணத்தை மட்டுமே இனி அவர் முழுமூச்சாக கவனிக்க உள்ளாராம்.

அடேங்கப்பா... சம்பள விஷயத்தில் கமல்ஹாசனையே மிஞ்சிய விஜய் சேதுபதி! இத்தனை கோடி சம்பளமா?

Latest Videos

click me!