பா.இரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது கார் சேஸிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட்மேன் எஸ்.எம்.ராஜு மரணமடைந்தார். சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெறும் ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் ராஜு. அவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராஜுவின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் சிம்பு, ராஜுவின் மறைவை அடுத்து அவர் குடும்பத்திற்கு சத்தமின்றி உதவி செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
24
ஸ்டண்ட் மேன் ராஜு குடும்பத்துக்கு உதவிய சிம்பு
அதன்படி ஸ்டண்ட் மேன் ராஜுவின் குடும்பத்துக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவி உள்ளாராம் சிம்பு. இந்த தகவலை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சமீபத்திய பேட்டியின் போது கூறி இருக்கிறார். சத்தமே இல்லாமல் மிகப்பெரிய உதவியை செய்துள்ள நடிகர் சிம்புவிற்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் ஒரு லட்சம் ரூபாய் எஸ்.எம்.ராஜு குடும்பத்திற்கு கொடுத்திருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. அவர் யாருக்கும் தெரியாமல் செய்த இந்த உதவி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தகவலை சிம்புவின் ரசிகர்களும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
34
10 ஆண்டுகளாக உதவும் சூர்யா
ஸ்டண்ட் மேன் ராஜுவின் மரணத்திற்கு பின்னர் தமிழ் திரையுலக பிரபலங்கள் யாரும் ஸ்டண்ட் மேன்களுக்கு உதவுவதில்லையா என்கிற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் நடிகர் சூர்யா கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் மேன்களுக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டுக்கு செலுத்தி வரும் தகவலை சில்வா வெளியிட்டார். சூர்யாவின் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாகவும், அவர் செய்யும் சமூக சேவைகளில் இதுவும் ஒன்று என சில்வா கூறி இருந்தார். சூர்யாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.
அதேபோல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் எஸ்.எம்.ராஜுவின் மறைவுக்கு பின்னர் ஸ்டண்ட் யூனியனில் பதிவு செய்த 650 ஸ்டண்ட் மேன்களுக்கு தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு உதவியை செய்து கொடுத்துள்ளார். அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் முன்னர் ஸ்டண்ட் கலைஞராக வேலை பார்த்துள்ளதால் அவர்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். ஸ்டண்ட் மேன் ராஜுவின் மறைவுக்கு பின்னர் இதுபோன்ற உதவிகளை செய்யும் திரைப்பிரபலங்கள், அவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.