சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படம் அண்ணன் - தங்கை இடையேயான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில், ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்த வருகிறார். விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஷூட்டிங் பணிகளை முடித்து.. தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஜெயிலர் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவலை புகைப்படம் அறிவித்துள்ளது படக்குழு. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார் தான் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில்... இன்று முதல் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கடந்த வாரம் வெளியே வந்த மகேஷ்வரி கணிப்பு..!
இவர் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில், யோகி பாபு, தரமணி நடிகர் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயக், ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.