விஜய் டிவி தொலைக்காட்சியில், போட்டியாளராக காலடி எடுத்து வைத்து, தன்னுடைய நகைச்சுவையான பேச்சு திறமையால், தொகுப்பாளர், துணை நடிகர், ஹீரோ என உயர்ந்து இன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் என்பதையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, சட்ட பேரவை தேர்தல் முழு வீச்சில் நடந்த நிலையில், அதில்.... சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், மீண்டும் ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் நடந்து வரும் போது, அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. ஆர்த்தியும் ஷாலை வைத்து, வயிறை மறைத்தது போல் உள்ளது.
எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது பற்றி தெரியவில்லை. தற்போது வைரலாகி வரும் புகைப்படம் இதோ...