திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? உண்மையை வெளிப்படையாக பகிர்ந்த நடிகர்!

Published : Feb 22, 2026, 07:23 PM IST

Shah Ra Emotional Statement About Movie Chances : இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை மவைத்து தான் வாய்ப்பு கொடுக்கின்றார்கள் அதை வைத்து தான் சம்பளம் பேசுகிறார்கள். மனம் உருக்கத்துடன் ஷா ரா இன்ஸ்டாகிராமில் பதிவு.

PREV
14
தமிழ் சினிமாவில் அறிமுகம்:

கோவில் குரங்குகள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ஷா ரா. சிவ சரவணன் என்கிற தனது பெயரை யூடியூபில் டிரெண்டாக ஷா ரா என மாற்றிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்திற்கு அடுத்து இவருக்கு ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. படத்தின் மூலம் ஷா ரா மிகப் பெரிய வரவேற்பை பெற்று வந்தார். காமெடியில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

24
கோமாளி:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி படத்தில் அவந்திகாவுக்கு கணவன் கதாபாத்திரத்தில் ஷா ரா நடுத்திருப்பார். அவரது படபடப்பா என பேச்சும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். சூப்பரா இருக்கு தமிழ் சினிமாவில்இருட்டு அறையில் முரட்டுக் குத்து, நட்பே துணை, கோமாளி, நான் சிரித்தால், சூப்பர் டூப்பர், ஆக்‌ஷன், ஓ மை கடவுளே, டிக்கிலோனா, டைரி, வாத்தி, பல்லு படாம பாத்துக்க, சொப்பன சுந்தரி, அநீதி, தி பாய்ஸ், டபுள் டக்கர், மின்மினி, கடைசி உலகப் போர் போன்ற படங்களிலும் ஷா ரா நடித்துள்ளார்.

34
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ:

அதிகாலை 4 மணிக்கு தூக்கம் வராமல் வீடியோவில் பேசி அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஷா ரா. பட வாய்ப்பு கொடுப்பவர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஃபாலோயர்களை கணக்கில் எடுக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் சம்பளமே பேசுகிறார்கள். இன்ஸ்டாவில் ஃபாலோயர்களை அதிகரிக்க எனக்கு ஏதேனும் ஒரு ஐடியா கொடுங்கள் என்றும் கேட்டுள்ளார் இது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கின்றது என்று நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

44
வீடியோ பதிவிட்ட அதற்கான காரணம்:

தனக்கு அழகு இல்லை என்றும் நீளமான தலைமுடி இல்லை, மொழு மொழுனு கன்னம் இல்லை. தாடி தான் அதுவும் நரைத்த தாடி இருக்கிறது.நேவல் ஷோ கூட செய்ய முடியாது என்றும், ரீல்ஸ் பண்ண விருப்பம் இல்லை என்றும், எதை செய்தால் ஃபாலோயர்கள் அதிகரிப்பார்கள் என தெரியாமல் தூக்கத்தை இழந்து பேசியிருக்கிறார் ஷா ரா. ஃபாலோயர்களை அதிகரிக்க எனக்கு கிளாமர் இல்லை என்றும் மிக வருத்தத்துடனும் மனம் உருக்கத்துடனும் பேசியுள்ளார். இதனைக் கண்ட இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இவர் பேசிய வீடியோவிற்கு அதிக லைக்களையும் கமெண்ட் களையும் குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories