தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் நாயகனானவர் சத்யராஜ் . ஒரு 80, 90களில் உச்ச நாயகனாக கொடிகட்டி பறந்தார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். பின்னர் தனது பாதையை திருப்பிய இவர் எந்த கதாபாத்திரமானாலும் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். குணச்சித்திர கதாபாத்திரம், துணை கதாபாத்திரம், காமெடி, ஆக்சன் என ஒவ்வொரு துறையிலும், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழை தொடர்ந்து டோலிவுட்டுக்கு பறந்த இவர் உலக புகழ் பெற்ற ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுவிட்டார்.