திருமணத்திற்கு முன்பே குழந்தை.! மகள் திவ்யா கருத்துக்கு - சத்யராஜ் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Published : Apr 27, 2026, 06:20 PM IST

Actor Sathyaraj Reaction: பிரபல நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் திருமணம் குறித்து, தன்னுடைய கருத்தை கூறியது பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது சத்யராஜ் இதுகுறித்து பேசியுள்ளார்.

PREV
16
சத்யராஜ்:

வாலிபத்தில் ஹீரோவாக நடித்த சத்யராஜ், வயதான பின்னர் தரமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. தந்தையை தொடர்ந்து மகன் சிபி ராஜும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து வெற்றி படத்தை கொடுக்க போராடி வருகிறார்.

26
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திவ்யா சத்யராஜ்:

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வந்ததோடு, கடந்த இரண்டு வருடமாக திமுக கட்சியில் தன்னை இணைத்து கொண்டு, கட்சி பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக, திமுக கட்சிக்காக தமிழகத்தின் பல்வேறு தொகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தன்னை முழு அரசியலில் அர்ப்பணித்து கொண்டதோடு மட்டும் இல்லாமல்... விஜய் பற்றிய தவறுகளையும் கட்சி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

36
திருமணம் பற்றி கருத்து:

இந்த நிலையில் தான், திவ்யா சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில முக்கியமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக திருமணம் பற்றி அவர் கூறிய கருத்து பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருமணம் பற்றி பேசும் போது, “திருமணம் என்பது எல்லோருக்கும் அவசியம் என்று நான் நினைக்கவில்லை”. திருமணத்தில் நடைபெறும் வழக்கமான சடங்குகளான தாலி கட்டுவது, மோதிரம் மாற்றுவது போன்றவற்றில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆண் - பெண் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால், அவர்கள் இணைந்து வாழலாம். அதற்காக கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும் என தேவையில்லை. மேலும், ஒரே வீட்டில் தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்க வேண்டியதில்லை; அவரவர் வீட்டில் இருந்தபடியே அவர்கள் தங்களின் வாழ்க்கையை தொடரலாம்.

46
திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை:

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசும் போது, திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு முழு ஒப்புதல் உள்ளது என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் இது தமிழ் கலாச்சாரத்திற்கு புறம்பானது என கூறி திவ்யா சத்யராஜை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

56
சத்யராஜ் கருத்து:

இந்த நிலையில் தான் நடிகர் சத்யராஜ், தன்னுடைய மகளின் கருத்து குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "வணக்கம், திருமணத்தைப் பற்றி, சாதி, சடங்குகளை பற்றி எல்லாம் என்னுடைய மகள் ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். இதற்க்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். என்னிடமும் இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. உங்களுக்கே தெரியும், நான் ஒரு பெரியாரிஸ்ட்... சாதி, மதம், ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடே கிடையாது.

66
தனி நபர் விருப்பத்தை சார்ந்த விஷயம்:

அதே போல் திருமணம் குறித்து என்னிடம் கேட்டார்கள். திருமணம் என்பது கட்டாயம் இல்லை. அது தனி நபர் விருப்பத்தை சார்ந்த விஷயம். திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது, தனியாகவே வாழ்வது, அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டாலும், இன்றைய நவீன மருத்துவ துறையில் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது தனி நபரின் விருப்பம் சார்ந்த விஷயம் தான். எனவே என்னுடைய கருத்துடன் திவ்யாவின் கருத்தும் ஒத்து போகிறது என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த கருத்துக்கு பின்னர், சத்யராஜையும் சில நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories