3ம் கட்டத்தில் நுரையீரல் புற்றுநோய்.. நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி...!

First Published | Aug 19, 2020, 5:48 PM IST

நேற்று இரவு சஞ்சய் தத் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Actor Sanjay Dutt shows a thumbs-up sign as he leaves from his residence for Kokilaben hospital in Mumbai
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு கடந்த 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
Actor Sanjay Dutt shows a thumbs-up sign as he leaves from his residence for Kokilaben hospital in Mumbai
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், பாலிவுட் திரையுலகினரும் சஞ்சய் தத் உடல் நலம் பெற வேண்டி தீவிர பிரார்த்தனை செய்தனர். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ரசிகர்களின் வேண்டுதலுக்கு பலனாக உடல் நலம் சீரானதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் மறுநாளே வீடு திரும்பினார். சஞ்சய் தத் வீடு திரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
தற்போது சஞ்சய் தத்தை மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலக இருப்பதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், நண்பர்களே, மருத்துவ ரீதியான காரணங்களால் நான் என் சினிமா பணியிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், எனது நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனது நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என குறிப்பிட்டிருந்தார்.
வெளியானது. அதாவது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
3ம் கட்டத்தில் இருக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதனிடையே நேற்று இரவு சஞ்சய் தத் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு செல்வதற்காக மனைவியுடன் மற்றும் சகோதரிகளை கட்டி அணைந்து சஞ்சய் தத் விடைபெறும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சஞ்சய் தத்திற்கு மும்பையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கொரோனா தொற்று எப்போது குறையும் என்பதை பொறுத்து தான் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சஞ்சய் தத்தின் உடல் நிலை குறித்த செய்திகளை பரப்புவதை விட்டுவிட்டு, மருத்துவர்கள் அவர்களுடைய பணியை தொடர் வழி செய்யும் படியும், அவருடைய உடல் நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து தெரியப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Latest Videos

click me!