யாஷிகாவுடன் காதல்? கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ததன் ரகசியம் பற்றி உண்மையை உடைத்த நடிகர் ரிச்சர்ட்!

First Published | Jun 7, 2023, 6:21 PM IST

அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகாவை காதலித்து வருவதாக ஒரு தகவல் தீயாகப் பரவி வந்த நிலையில், இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகை ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மச்சினனுமான ரிச்சர்ட் ரிஷி தன்னுடைய சமூக வலைதளத்தில் யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலர், யாஷிகாவும் ரிச்சர்ட் ரிஷியும் காதலிக்கிறார்களா? என சந்தேகக் கேள்வியை எழுப்ப துவங்கினர்.
 

மேலும் இந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல், அடுத்தடுத்து இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது. எனவே ரிச்சர்ட் மற்றும் யாஷிகா இருவரும், காதலித்து வருவதாகவும், டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவர துவங்கின.

சாலை ஓரத்தில் உடை மாற்றிய மீனா! மேடையில் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்! ஆச்சர்யமூட்டும் தகவல்!
 

Tap to resize

இந்த செய்தி குறித்து யாஷிகாவும், ரிச்சர்டும், எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காத நிலையில்... விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.  அதேபோல் பல அஜித் வீட்டு மருமகளாக, யாஷிகா மாறப் போகிறாரா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கினர்.
 

கடந்த சில தினங்களாக இவர்களின் காதல் விவகாரம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் யாஷிகாவின் தாய் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.  எனினும் பலர் ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

Custody OTT Release Date: வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, தற்போது ரிச்சர்ட் பிரபல பத்திரிக்கை ஒன்றில் இந்த காதல் விவகாரம் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'சில நொடிகளில்' என்ற திரைப்படத்தில் நானும், யாஷிகாவும் இணைந்து நடித்து வருகிறோம். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. அதனை சோசியல் மீடியாவில் எதார்த்தமாக ஷேர் செய்தேன். ஆனால் இதை பலர் தவறாக எடுத்துக் கொண்டனர். 

இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்ததால், இது பற்றி விளக்கம் கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் இருவருக்கும் இடையே காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என ரிச்சர்ட் கூறியுள்ளார். ரிச்சர்ட் - யாஷிகா இணைந்து நடித்துவரும் சில நொடிகள் படத்தை, கன்னட இயக்குனர் வினை பரத்ராஜ் இயக்கி வருகிறார். அது மட்டும் இன்றி, இப்படத்தை ஜீன்ஸ், தாம் தூம், கோச்சடையான் போன்ற படங்களை தயாரித்த முரளி மனோகரன் தயாரித்து வருகிறார்.

ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு.. கோட் - சூட்டில் கவர்ச்சி காட்டும் தமன்னா!
 

யாஷிகா - ரிச்சர்ட் நடித்து வரும் இந்த படத்தில், இருவரும் சேர்ந்து... ஹாலிடேவுக்கு வெளியே போவது போல் சில காட்சிகள் இருக்கிறதாம். இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது, எடுத்த புகைப்படங்களையும்,  செல்ஃபி  புகைப்படங்களை ஷேர் செய்தார் ரிச்சர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!