சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மார்ச் 15 ஆம் தேதி படக்குழுவினர் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும அறிவுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதால், மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் துவங்கியது. கிட்ட தட்ட 15 நாட்கள் சென்னை கோபுரம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அண்ணாத்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டு நடித்து வருவதாகவும், எனவே விரைவில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விரைவி ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளையும் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.