சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து கலக்கினார் வித்யா பிரதீப்.
சீரியலில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சீரியலில் இவர் கதாபாத்திரம் நிறைவடைந்த பின்னர்... முழு நேர வெள்ளி திரை நாயகியாக மாறிவிட்டார். முன்னணி ஹீரோக்களுக்கு கூட ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியது.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பட்டு சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சாய்ந்து பார்க்கும் பேரழகி
கழுத்தில் கை வைத்து கியூட் போஸ்
நச்சுனு போஸ் கொடுக்கும் நடிகை
ஃபிரீ ஹேரில்... வெரைட்டி போஸ்
சிலை போல் நின்று நச்சுனு போஸ் கொடுக்கும் வித்யா