80 பது மற்றும் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான்.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
தற்போது ஹீரோவாக நடிப்பதை விட, தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரகுமான் .
அந்த வகையில் வெளியான, துருவங்கள் 16 , குற்றமே தண்டனை, 36 வயதினிலே உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம், விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களை போல் இவரும் தன்னுடைய மகள்கள் மீது கேமரா வெளிச்சம் படாமல் வைத்துள்ளார்.
ஆனால் இவரது மனைவி மெஹருன்னிஷா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனையின் சகோதரி என்பது பலரும் அறிந்ததே.
இப்போதும் யங் ஹீரோ போல் இருக்கும் நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ஆச்சரியப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கேரளா சேலையில்... விஷு கொண்டாட தயாராகும் ரகுமானின் மகள்
மகள்களை குழந்தை போல் தூக்கி வைத்து கொஞ்சும் அன்பு தந்தையாக ரகுமான்
அழகிய குடும்பத்தின் புகைப்படம்
அப்பா - மகள் பாசமே தனி அழகுதான்
manimegalai a