தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?

Published : Jan 28, 2025, 09:48 AM IST

பிரபல நடிகர் ஒருவர், ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும்... ஆனால் அதை தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

PREV
16
தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?
இளம் இயக்குனர்களின் மிகப்பெரிய கனவு:

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பல இளம் இயக்குனர்களின் மிகப்பெரிய கனவு என்றும் கூறலாம். பல இளம் இயக்குனர்களின் கனவை நிறைவேற்றுவது போல, ரஜினிகாந்தும் சமீப காலமாக தொடர்ந்து இளம் இயக்குனர்கள் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார்.

26
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி:

'வேட்டையன்' படத்தை, ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், இதை தொடர்ந்து தற்போது, கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடி யாரும் இல்லை என கூறப்படுகிறது . அதே நேரம் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகி வருவதால், இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உப்பேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் போன்ற பலர் நடிக்கிறார்கள். உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ரெபேக்கா மோனிகா ஜான் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

பெண் என்றால் பத்தினியா தான் இருக்கணுமா? 'Bad Girl' பட இயக்குனர் வர்ஷா சர்ச்சை பேச்சு - எகிறும் கண்டனம்!

36
ஜெயிலர் 2 :

இந்த ஆண்டு வெளியாக உள்ள, இந்த படத்தை தொடர்ந்து ரஜினியாகாந்த்... நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இதனை உறுதி செய்யும் விதமாக அண்மையில் இதன் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒரு சில புதிய நடிகர்களும் இந்த படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. எனவே இந்த படத்திற்கான நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

46
நிராகரித்த பிரிதிவிராஜ்

இப்படி தொடர்ந்து இளம் இயக்குனர்கள் படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் பட வாய்ப்பு பிரபல நடிகருக்கு கிடைத்த போதும், அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று நடந்த எம்புரான் பட விழாவில் நடிகரும், இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 

56
ரஜினிகாந்த் பட வாய்ப்பு:

லைகா நிறுவனம் சாரிப்பில் எம்புரான் படத்தை இயக்கி உள்ள பிரித்விராஜிடம்... ரஜினிகாந்துக்கு ஒரு படத்தை தயார் செய்ய முடியுமா என, சுபாஸ்கரன் அல்லி ராஜா கேட்டதாகவும், ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தாலும், நான் சில படங்களில் நடித்து வருவதால் பகுதி நேர இயக்குனராக என்னால் அந்த குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் அவருக்கான ஒரு மாஸ் கதையை தயார் செய்வது சாத்தியம் இல்லாதது. எனவே அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

66
எம்புரான்:

பிரித்விராஜ் தற்போது எம்புரான் படத்தை மோகன் லாலை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ளார். இந்த படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

click me!

Recommended Stories