தொடர்ந்து Flop படங்களை கொடுத்த உச்சநடிகர்.. ஆனாலும் ரூ.1100 கோடியில் ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பார்கள்..

Published : Dec 09, 2023, 05:17 PM ISTUpdated : Dec 09, 2023, 07:07 PM IST

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் தயாரிப்பாளர்கள் இந்த நடிகரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளனர்.

PREV
111
தொடர்ந்து Flop படங்களை கொடுத்த உச்சநடிகர்.. ஆனாலும் ரூ.1100 கோடியில் ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பார்கள்..

பெரிய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்ப்படும் பல படங்கள் தோல்வி அடைவதையும் சிறிய பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து வருகின்றனர்.

211

இதில், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகக் கூறப்படும் ஒரு தென்னிந்திய நடிகர் ஒருவரும் உள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் இன்னும் கூட தயாரிப்பாளர்கள் அவருக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளனர். அதுவும் அந்த நடிகரை நம்பி சுமார் 1100 கோடி பணத்தை தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளனர். 

311

ஆம்.. அவர் வேறு யாருமில்லை நடிகர் பிரபாஸ் தான்.. பான் இந்தியா வெற்றி படங்களில் நடித்த அதே பிரபாஸ் தான் தனது கேரியரில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 

411

நடிகர் பிரபாஸ் இந்தியாவின் அதிகம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 2002 இல் வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படம் சராசரியான வெற்றியை பதிவு செய்தது.

511

அடுத்தடுத்த ஆண்டுகளில் வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிகாடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார், ஆனால் அடவி ராமுடு, சக்கரம், பௌர்ணமி, யோகி, போன்ற தோல்விப் படங்களிலும் நடித்தார். முன்னா, மற்றும் ஏக் நிரஞ்சன். பில்லா, டார்லிங் மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட், மிர்ச்சி போன்ற படங்களின் மூலம் மீண்டும் வெற்றியை பதிவு செய்தார் பிரபாஸ்.. 

611

பின்னர், 2015-ல் பாகுபலி 1, 2017-ல் பாகுபலி 2 என அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தன.

 

711

பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பிரபாஸ் தனது திரை வாழ்க்கையில் மோசமான கட்டத்தை சந்தித்தார் என்றே சொல்ல வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

811

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சாஹோ படம் வசூல் ரீதியில் ஓரளவு தப்பித்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டும் பெரிய தோல்விப்படங்களாக அமைந்தன.. 'ராதே ஷியாம்' மூலம் தயாரிப்பாளர்களுக்கு ரூ 170 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆதிபுருஷ் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ 200 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

911

இப்படி 370 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும், தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மீது மீண்டும் 1100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் சலார். பிரபாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிருத்விராஜ் ,ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சலார் படம். 400 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.  

 

1011

இதே போல் பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 AD படம் இன்றுவரை அதிக பொருட்செலவில் இருக்கும் படமாக கூறப்படுகிறது. 700 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தின் டீசரும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

1111

எனவே மொத்தம் ரூ.1100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் 2 படங்களும் அதிக எதிர்பார்க்கப்படும் படங்களாக மாறி உள்ளன. இந்த படங்கள் மூலம் பிரபாஸ் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories