Prabhas : காலில் காயம்... ஆபரேஷன் செய்ய அமெரிக்கா விரையும் பிரபாஸ் - பாதியில் நிற்கும் பிரம்மாண்ட படங்கள்

Published : Apr 05, 2022, 01:04 PM IST

Prabhas : நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தபோது காலில் காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருந்து வந்தார் பிரபாஸ்.

PREV
14
Prabhas : காலில் காயம்... ஆபரேஷன் செய்ய அமெரிக்கா விரையும் பிரபாஸ் - பாதியில் நிற்கும் பிரம்மாண்ட படங்கள்

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தவர் பிரபாஸ். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் அனைத்து பான் இந்தியா படங்களாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன.

24

குறிப்பாக கடந்த மாதம் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான ராதே ஷ்யாம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்தது. வசூலிலும் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் கடும் இழப்பை சந்தித்தது. இப்படம் ரூ.100 கோடி அளவு இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

34

அடுத்தடுத்து பிரபாஸ் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால், அவரின் மார்க்கெட் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அவரை வைத்து அடுத்ததாக தயாராகி வரும் ஆதிபுருஷ், சலார், ப்ராஜக்ட் கே, ஸ்பிரிட் ஆகிய படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர். தற்போது அவர்களுக்கு மேலும் ஒரு தலைவலி தரும் செய்தியாக வந்துள்ளது பிரபாஸின் உடல்நிலை. 

44

நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தபோது காலில் காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருந்து வந்தார் பிரபாஸ். தற்போது அந்த காயம் பெரிதாகி உள்ளதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார் பிரபாஸ். இதற்காக அமெரிக்கா செல்ல உள்ள அவர், அங்கு 3 மாதம் தங்கி ஓய்வெடுத்த பின்னரே இந்தியா வர முடிவு செய்துள்ளாராம். இதனால் இவர் நடிக்கும் படங்கள் பாதியில் முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்...  Ilaiyaraaja : காப்புரிமை விவகாரம்... இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Read more Photos on
click me!

Recommended Stories