இதையடுத்து இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சூர்யா. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாலுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.