Nithya Balaji :கமல் ரொம்ப வொர்ஸ்ட்.. அவர மாதிரி மோசமானவரை நான் பார்த்ததில்லை- தாடி பாலாஜி மனைவி நித்யா காட்டம்

Published : Apr 05, 2022, 08:48 AM IST

Nithya Balaji : பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாடி பாலாஜி 'நித்யா எனது மகளை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்' என ஊடகங்களில் பேட்டியளித்திருந்தார். 

PREV
14
Nithya Balaji :கமல் ரொம்ப வொர்ஸ்ட்.. அவர மாதிரி மோசமானவரை நான் பார்த்ததில்லை- தாடி பாலாஜி மனைவி நித்யா காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவிற்கும் இடையே நடக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜி போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது, தன்னைப் பற்றியும் தனது மகள் போஷிகாவை பற்றியும் தவறாக பேசக்கூடாது என தாடி பாலாஜியை எச்சரித்திருந்தார் நித்யா. 

24

இதையடுத்து அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாடி பாலாஜி 'நித்யா எனது மகளை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்' என ஊடகங்களில் பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை மீண்டும் ஊடகங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

34

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நித்யாவிடம் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசியது. அப்போது பதிலளித்த நித்யா, 'ஊடகங்களில் பேசி எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? உங்களுக்கு கண்டன்ட் தான் நிறைய கிடைக்கும். எங்கு பேசினால் எனக்கு நீதி கிடைக்குமோ அங்கு பேசிக்கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகர் கமல், நித்யாவை அழைத்து அட்வைஸ் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

44

இதற்கு பதிலளித்த நித்யா, 'யாரு அவரா? வேண்டாங்க. அவரைப் பற்றி என்ன பேச வச்சிராதீங்க. அப்புறம் நான் நிறைய கண்டன்ட்ட வெளிய சொல்லிடுவேன். கமல் மாதிரி ஒரு மோசமான கேரக்டர என் லைஃப்ல பாத்ததில்ல. போதும், என்ன ரொம்ப பேச வச்சிராதீங்க' எனக் கூறியுள்ளார். கமல் பற்றி நித்யா பேசியிருக்கும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... AK 61 Update : பர்ஸ்ட் யுவன்... இப்போ இவரா? - வலிமை கூட்டணியை கழட்டிவிடும் எச்.வினோத்! AK 61-ல் அதிரடி மாற்றம்

Read more Photos on
click me!

Recommended Stories