பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன. தற்போது இவர் கைவசம் சலார், புராஜக்ட் கே, ஆதிபுருஷ், ஸ்பிரிட் ஆகிய படங்கள் உள்ளன. இதில் தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
சலார் படத்தை கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதையடுத்து ஆதிபுருஷ் என்கிற வரலாற்று படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக நடிக்கிறார். இதில் வில்லனாக சைப் அலிகான் நடிக்கிறார்.
இவ்வாறு படு பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ் அவ்வப்போது திருமண சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அதன்படி பாகுபலி படத்தில் நடித்தபோது, அவர் நடிகை அனுஷ்காவை காதலித்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த இருவரும் தாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.