கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட காலம் தங்குவதற்கான வழிவகையை செய்கிறது. இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது. முன்னதாக டிசம்பர் 2021 இல், நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான ஆர் பார்த்தீபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார்.
23
Venkat prabhu holds Golden Visa in UAE
பின்னர், நடிகை அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர் மற்றும் ஜனவரியில் துபாய் அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இதையடுத்து சமீபத்தில் பழம்பெரும் நடிகர் நாசர் மற்றும் ரஹ்மான் ஆகியோருக்கு கிடைத்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற தமிழ்த் திரையுலகில் சமீபத்தியவராக இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியுள்ளார்..
33
Venkat prabhu holds Golden Visa in UAE
வெங்கட் பிரபுவின் சமீபத்திய வெற்றியான 'மாநாடு' மற்றும் 'மன்மத லீலை' படங்களை தொடர்ந்து அடுத்த படமாக நாக சைதன்யாவை வைத்து தயாரிக்கிறார். இந்த படத்தில் இயக்குனரின் பெரியப்பாவான இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இருவரும் ஒருங்கே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாகசைதன்யாவின் 22 வது படத்தில் இந்த கூட்டணி இணைவது குறித்து உறுதி படுத்தும் வகையில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.